வெளிநாட்டு அமைச்சில் பதவி வெற்றிடங்கள்!

Thursday, September 22nd, 2016

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அலுவலக சிறு பணியாளர்கள் சேவைக்கு அமர்த்துவதற்கான வெற்றிடங்கள் தொடர்பில் தகுதி பெற்ற இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்த சிறு பணியாளர்களின் சேவையானது நிரந்தரமானது என்றும் நேர்முகப் பரீட்சையின் போதே விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு தடவைக்கு மேற்படாமல் தோன்றி இரண்டு பாடங்களில் மாத்திரம் திறமை சித்தி பெற்றிருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 18 தொடக்கம் 45 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் என்றும், விண்ணப்ப முடிவு திகதி இந்த மாதம் 30ஆம் திகதி வரையில் மாத்திரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தொழில் தொடர்பான மேலதிக விபரங்கள் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

foreign-ministry-1

Related posts:

இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமிதம் கொள்கிறது - சந்திரயான் 3 வெற...
திடீர் சுகயீனம் - யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உ...
இந்திய அரசு மனிதாபிமன உதவி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யாழ் முஸ்லிம் மக்களுக்கு உதவித்திட்டம் வழங...