யாழ். மாநகர சபை கழிவகற்றல் கட்டமைப்பை நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கீடு அவசியம் – ஈ.பி.டி.பி!

Saturday, September 12th, 2026


…..
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றல் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்கு கணிசமான நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர வட்டாரக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், மாநகர எல்லைக்குள் மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, யாழ். மாநகரப் பகுதிகளில் கழிவகற்றல் நடவடிக்கைகளில் காணப்படும் வினைத்திறன் குறைபாடு காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் கழிவுகள் தேங்கிக் காணப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பல்வேறு சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து, மாநகர சபைக்கான எதிர்கால நிதியொதுக்கீடுகளின்போது கழிவகற்றல் துறைக்கு கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்து, தற்போதைய கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதுடன், கழிவுகளை முறையாக சேகரித்தல், பிரித்தல், கொண்டு செல்லுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாநகர மக்களின் அன்றாட வாழ்வுடன் நேரடியாகத் தொடர்புபட்ட கழிவகற்றல் பிரச்சினைக்கு நீடித்த தீர்வொன்றை வழங்குவதற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் உரிய வளங்களுடன் கூடிய கட்டமைப்பு அவசியம் என்றும் கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், யாழ். மாநகர சபையில் ஆளுந்தரப்புக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வழங்கும் ஒத்துழைப்பு என்பது, எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் அல்லாது, மக்களின் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கானதாகவே அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மாநகர மக்களின் அடிப்படைத் தேவைகள், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களில் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் முக்கியஸ்தர் கந்தசாமி கமலேந்திரன், ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106