பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்ட அழைப்பில் புறக்கணிப்பு – மயிலிட்டி மக்கள் பிரதேச செயலருக்கு மகஜர்!
Friday, September 11th, 2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலி வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் தரப்பின் பிரதிநிதிகள் குறிப்பாக மயிலிட்டி போராட்ட அமைப்பின் பிரதினிதிகள் அண்மைய இரு ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களுக்கு அழைக்கப்படாது தாம் புறக்கணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியும் அரச தரப்பால் இம்மாதம் விடுவிக்கப்பஉம் என கூறப்படும் காணிகளின் விபரங்கள் குறித்த தகவல்களை உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்துமாறு கோரியும் தெல்லிப்பழை பிரதேச செயலருக்கு மகஜர் கையளித்துள்ளனர்.
மயிலிட்டியில் போராடிய ஒரு பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு பிரதேச செயலகம் சென்று, இன்று (11) குறித்த மகஜயரை கையளித்துள்ளனர்.
இது குறித்து குறித்த அமைப்பின் பிரதினிதிகள் கூறுகையில் –
நடைபெறும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் எம்மையும் அழைப்பது வழமை. ஆனால் கடந்த இரு கூட்டங்களுக்கு நாம் அழைக்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம்.
இதனால் காணிகளை இழந்த தமது தரப்பு நியாயங்கள் செவிசாய்க்கப்படாது தொடர்ந்தும் தட்டிக்களிக்கப்பட்டு வருவதாக காணி விடுவிப்புக்காக போராடும் ஏற்பாட்டுக் குழு சுட்டிக்காட்டி தமக்கு மீண்டும் அழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரியிருந்ததுடன்,
மயிலிட்டி மக்களின் நில மீட்பு அறிவளிப் போராட்டமானது இன்றைய தினத்துடன் (11.09.2026) 21 வாரங்களை கடந்துள்ளது.
இன்றுவரை பல்வேறுபட்ட ஊடகக்கள் வாயிலாகவும் செய்திகள் வாயிவாகவும், கடற்றொழில் அமைச்சர் வாயிலாகவும், ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாயிலாகவும் இம்மாத இறுதிக்குள் காணி விடு என்ற சுதி மட்டும் மாதாமாதம் பார்க்க முடிகின்றது.
ஆனால் இது குறித்து எந்தவொரு அரச அதிகார பூர்வமான கருத்துக்களும் உத்தியோக பூர்வமாக பிரதேச செயலக ரீதியாக வெளியிடப்படவில்லை. எனவே காணி விடுவிப்பு தொடர்பான நிலைப்பாடுகளை எழுத்து மூலமாக தெரியப்படுத்துமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106