ஈ பி.டி பி. அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது!

Friday, September 4th, 2026


…………..
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அலுவலகத்தின் வரவேற்புப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்று(04.09.2026) காலை 10 மணியளவில், அலுவலகத்தின் வரவேற்பு பகுதியினுள் நுழைந்த இருவர், அடாவடியில் ஈடுபட்டதுடன் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்ட நிலையிலேயே சம்மந்தப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மாலை அலுவலகத்திற்கு வருகைதந்த பிரதான சந்தேகநபரின் தாய் மற்றும் மைத்துனர் ஆகியோர் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மன்னிப்புக் கோரியதுடன் சந்தேகநபர்களை வழக்கில் இருந்து விடுவிக்க உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106