குறிகாட்டுவான் பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை முறைப்படுத்துவதற்கு சீரான பொறிமுறை அவசியம் – ஈ.பி.டி.பி. வலியுறுத்து!
Saturday, August 22nd, 2026
…..
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டார உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (22.08.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது வேலணை பிரதேச சபையில் பிரஸ்தாபிக்கப்பட வேண்டிய வட்டார ரீதியான மக்கள் நலன்சார் விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
குறிப்பாக பிரதேச சபையின் கடந்தகால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும்.குறித்த கலந்துரையாடலில் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பெருமளவானோர் நாளாந்தம் வருகை தருகின்ற நிலையில், குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை முறைப்படுத்துவதற்கு சீரான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், வட்டாரக் குழுக்களை மேலும் வலுப்படுத்தி, கட்சியின் பிரதேச மட்டச் செயற்பாடுகளை வீரியமாக முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில், கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் (ஜீவன்) மற்றும் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.



|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106