சாரதி நித்திரை தூக்கம் -யாழ் ஊர்காவற்றுறை வீதியில் விபத்து !
Saturday, August 22nd, 2026
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாள்ளத்துற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று (22) மதியம் இடம்பெற்றது.
அராலிச் சந்தியை அண்மித்த பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற குறித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான குறித்த கார் யாழ் வேலணைப் பகுதியை நோக்கி புதிதாக கட்டமைக்கப்பட்டுவரும் அதி உயர் மின் கம்பத்தில் மோதி பலத்த சேதங்களுக்குள்ளான நிலையில் பொலிசாரின் விசாரணைகளைபடுத்து பாரம் தூக்கியின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த விபத்தின் போது எவருக்கும் பாரதூரமான விழைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவருவதுடன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கமே விபத்துக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான ஜனாதிபதியின் நடவடிக்கை!
தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 4 இல் வாக்களிக்க சந்தர்ப்பம் - தேர்தல் ஆணைக்குழுவின...
13 ஆவது திருத்த அமுலாக்கம் முடங்கியதற்கு தமிழ்க்கூட்டமைப்பே காரணம் - சாடுகிறார் அமைச்சர் ஜீ.எல் பீரி...
|
|
|


