மாணவன் வைஷ்ணவனின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
Thursday, August 20th, 2026
……
தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்துவந்த நிலையில் மரணம் அடைந்த மாணவன் திருநாவுக்கரசு வைஷ்ணவனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 16.08.2026 அன்று பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் குறித்த மாணவன் மரணமடைந்திருந்தார்.
இன்நிலையில் திருநெல்வேலியில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சென்ற செயலாளர் நாயகம் ஊதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கும், அவரது பிரிவால் துயருறும் சக மாணவர்களுக்கும் தனது ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபத்தையும் பகிர்ந்துகொண்டார்.
குறித்த அஞ்சலிப்பின் போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், வேலணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நமசிவாயம் கருணகரகுரு மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106