அறிமுகமாகும் புதிய விதி – களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரரானார் நெய்மர்!
Wednesday, August 19th, 2026
பிரேசில் சீரி ஏ தொடரில் கோல் காப்பாளர்களின் நேரத்தை வீணடிக்கும் செயல்களைத் தடுக்கும் வகையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதியின் கீழ், களத்திலிருந்து ஒரு நிமிடம் வெளியேற்றப்பட்ட முதல் வீரர் என்ற பெயரை சாண்டோஸ் அணியின் தலைவரான நெய்மர் பெற்றுள்ளார்.
புதிய விதியின் கீழ், ஆட்டம் நடைபெறும் போது கோல் காப்பாளர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டால், போட்டி மீண்டும் ஆரம்பிக்கும் போது 1 நிமிடத்திற்கு ஒரு வெளிக்கள வீரரை பயிற்சியாளர் போட்டிக்குள் ஈடுபடுத்தவேண்டும்.
பயிற்சியாளர் 10 வினாடிகளுக்குள் எந்த வீரரையும் குறிப்பிடத் தவறினால், அணியின் தலைவரே 1 நிமிடம் களத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதியாகும்.
இந்தநிலையில், வாஸ்கோ டகாமாவுக்கு எதிரான போட்டியில் சாண்டோஸ் கோல் காப்பாளர் கேப்ரியல் பிராஸாவ் மருத்துவ சிகிச்சை கோரிய போது, சாண்டோஸ் பயிற்சியாளர் 10 வினாடிகளுக்குள் எந்த வீரரையும் குறிப்பிடவில்லை.
இதனையடுத்து, நெய்மரை 1 நிமிடம் வெளியேறுமாறு நடுவர் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவத்திற்கு மத்தியிலும் சாண்டோஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தப்போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த புதிய சோதனை விதி இங்கிலீஷ் பிரீமியர் லீக் உள்ளிட்ட பிற தொடர்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106