அமரர் கந்தையா ஈஸ்வரனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்!

Tuesday, August 18th, 2026


…..
வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளருமான மணிராஜா அவர்களின் மைத்துனர் கந்தையா ஈஸ்வரனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அமரர் ஈஸ்சரன் தனது 47 ஆவது வயதில் கதிர்காமம் சென்றிருந்தபோது ஏற்பட்ட  விபத்தொன்றில் சிக்கி கடந்த  15.08.2026 ஆம் நாளன்று அகால மரணமடைந்தார்.

இன்நிலையில் யாழ்ப்பாணம் கல்வியன்காடு பகுதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம், பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் உறவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

குறித்த அஞ்சலிப்பின் போது செயலாகர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா,  கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் உள்ளிட பலரும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106