நாடில் உச்சத்தைத் தொட்ட டெங்கின் தாக்கம்!

Sunday, August 9th, 2026

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.

அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:


இன்னும் இரு ஆண்டிற்குள் சகல நிறுவனங்களும் சூரிய சக்தியால் வலுவூட்டல் செய்யப்படும்  -நிதியமைச்சர்
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இராணுவத் தளபதியின் ஆலோசனையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படும்...
நிதி வசதியின் இரண்டாவது தவணைக்கான அனுமதியை சர்வதேச நாணய நிதியம் இன்று வழங்கும் - ஜனாதிபதி உறுதி!