“நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” வைபவ ரீதியாக திறந்து வைப்பு!
Thursday, August 6th, 2026
……
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் வடக்கு வாசலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, இன்று (06.08.2026) வியாழக்கிழமை ஆடிக் கார்த்திகை நன்னாளை முன்னிட்டு தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00மணிக்கு காண்பிய விரிப்புக் கண்டது.
முன்பதாக இதனை முன்னிட்டு, முற்பகல் 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் ஆலயத்திலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டைத் திருக்கை காளை மாட்டு வண்டி மங்கள வாத்தியங்கள் குறித்த இடத்தை நோக்கி புறப்பட்டது.
நண்பகல் 12.00 மணியளவில் தெய்வேந்திர முகூர்த்த நேரத்தில், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வந்த காளை மாட்டு வண்டி முதன்முறையாக புதிய “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” ஊடாகப் பிரவேசித்தது.
அதன் பின்னர் அந்த நெல் பெட்டகம் நல்லூர் கந்தசுவாமி திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆடிக் கார்த்திகை நன்னாளில் நடைபெற்ற இந்த மங்களகரமான நிகழ்வில் பக்தர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106