24 சட்டவிரோத சூதாட்ட இணையதளங்களுக்கு இலங்கையில் தடை!

Wednesday, August 5th, 2026


…..
இலங்கையில் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி இயங்கி வந்த 24 சட்டவிரோத இணையவழி சூதாட்ட இணையதளங்களுக்கானஅணுகலை (Access), இலங்கை அரசாங்கம் முடக்கியுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபையின் கோரிக்கைக்கு இணங்க, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன்படி, அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் குறித்த இணையதளங்களை உடனடியாக முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை 2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆகிய பிரிவுகளின் கீழ் செல்லுபடியாகும் உரிமம் இன்றி ஆன்லைன் சூதாட்ட சேவைகளை நடத்துவது அல்லது விளம்பரப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

இலங்கையின் சட்டக் கட்டமைப்புக்கு வெளியே இயங்கும் இவ்வாறான அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் சூதாட்டத் தளங்களில் பணத்தை முதலீடு செய்யவோ அல்லது அவற்றைப் பயன்படுத்தவோ வேண்டாம் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் TRCSL பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளன.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106