நடுவானில் கடும் காற்றுக் கொந்தளிப்பு -வானூர்தியில்  பயணித்த 27 பேர் காயம்!

Wednesday, August 5th, 2026

தாய்லாந்தின் புகெட் தீவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஏர் இந்தியா வானூர்தி (AI2379) நடுவானில் திடீரென ஏற்பட்ட கடும் காற்றுக் கொந்தளிப்பு காரணமாகக் குலுங்கியதில் 13 பயணிகளும் 4 வானூர்திப் பணியாளர்களும் காயமடைந்துள்ளனர்.

பயணத்தின் போது ஏற்பட்ட இந்த திடீர் அதிர்வுகளால் வானூர்தி சுமார் 300 அடிகள் வரை கீழே இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், விமானி திறம்படச் செயற்பட்டு வானூர்தியை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

தரையிறக்கப்பட்டதை அடுத்து, காயமடைந்த நபர்கள் உடனடியாக வானூர்தி நிலைய முதலுதவி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்துச் சிவில் வானூர்தி போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106