நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!…..

Monday, July 27th, 2026


உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில்  (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 அதன்படி, தற்போது முறையே 63 மற்றும் 65 ஆண்டுகளாக உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை, அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகளால் நீடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106