பலாலி காணி விடுவிப்பு கோரி 6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!
Sunday, July 26th, 2026
……
வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்படாத மக்களால் பலாலி காணி விடுவிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 6 ஆவது வாரமாகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இன்றையதினம் (26) பலாலி சந்திச் சந்தியில் ஒன்றுகூடிய நிலமிழந்த மக்கள், தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எங்கள் நிலங்கள் எங்களுடையது தானே, அது எப்படி உங்களுடையதாகும்,
“எதுவரை பொறுமை, எதுவரை காத்திருப்பு.. மீள்குடியேற்றம் எப்போது?”
உள்ளிட்ட பல வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் மக்கள் தமது உரிமைகளை வலியுறுத்தினர்.
நீண்ட காலமாக தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாமல் வதைகளுக்குள்ளாகி வரும் மக்கள், அரசாங்கம் மற்றும் உரிய தரப்பினர் உடனடியாகத் தலையிட்டு தங்களின் பூர்வீக நிலங்களை மீளப்பெற்றுத் தருமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.







000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106