வீதியோரங்களில் மின் கம்பங்களால் இடையூறு – சுயமாக தீர்வை தேடிய வலி மேற்கு பிரதேச சபை!

Saturday, July 25th, 2026


…..

வீதி அகலிப்பு மற்றும் செப்பனிடும் நடவடிக்கைகளின் பின் வீதியோரங்களில் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு பிரதேச சபை, மின்சார சபையுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்வை எட்டியுள்ளதாக சபையின் மாதாந்த அமர்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

குறிப்பாக வீதி அகலிப்பின் போது வீதியின் உள்ப்பக்கமாக  சில மின்கம்பங்கள் அகற்றப்படாது மக்களின் போக்குவரத்துக்கு பெரும் ஆபத்தான ஒன்றாக இருந்து வருகின்றது.

இவ்வாறான மின்கம்பங்களை அகற்றி நாட்டுமாறு பிரதேச மக்கள் பல்வேறு கோரிக்கைகளை எம்மிடம் முன்வைத்த நிலையில் அதற்கான தீர்வை எட்டுவதில் பெரும் இழுபறி ஏற்பட்டது.

இன்னிலையில் இவ்விடையத்தை நாம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கொண்டுசென்றும் தீர்வைக் கோரியிருந்தோம். குறிப்பாக எமது பிரதேசத்தைச் சேர்ந்த் மாற்று வலுவுடைய ஒருவரும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில்  வலியுறுத்தீ வந்துளள்ளார்.

ஆனால் மின்சாரசபை கட்டணம் செலுத்தினால் மட்டுமே கம்பங்களை அகற்றி மீள் நாட்டித்தர முடியும் என கூறியிருந்தது.

குறிப்பாக 8.3 மீற்றர் மற்றும் 6 மீற்றர் கம்பங்களை அகற்ற  40 முதல் 75 ஆயிரம் வரை கட்டணத்திக் கோரினர்.

இன்னிலையில் பிரதேச சபை மின்சர சபையுடன் பேசி குறைந்த கட்டணத்தில் அதை அகற்றும் முயற்சியில் இறங்கியது.

இதன் பயனாக தற்போது 20 முதல் 35 ஆயிரம் வரையான கட்டணத்திற்கு குறித்த மின்கம்ப அகற்றும் நடவடிக்கையை செய்துதர மின்சார சபை ஒப்புதல் தந்துள்ளது.

அதனடிப்படையில்  23 07.2026 முன்னர் இடையூறாக இருக்கும் கம்பங்களை கட்டணம் செலுத்தி பிரதேச சபை அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அதே நேரம் இனிவரும் நாள்களில் இவ்வாறான இழுபறிகளை தவிர்க்கும் முகமாக  மின்கம்பங்கள் அகற்றவேண்டியதாக அடையாளப்படுத்தப்பட்டால் வீதிகளுக்கான முன்மொழிவு நிதி ஒதுக்கீட்டின் போதே அதற்கான நிதியையுமொதுக்கீடு செய்து கொள்வதென்றும்,

பிரதான மற்றும் உள்ளக வீதி அபிவிருத்திகளின் போது துறைசார் தரப்பினர்  பிரதேச சபையுடனும் கலந்துரையாடி செயற்பாடுகளை முன்னகர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106