“பிளான்ரேசன்” நிறுவனங்களில் முதலீடு -பணத்தை உடன் மீளப்பெறுங்கள் –  மத்திய வங்கி அவசர எச்சரிக்கை!

Friday, July 24th, 2026


…..
இலங்கையில் பல்வேறு பயிர்ச்செய்கை முறைகளுக்காக முதலீடு செய்வதாகக் கூறி மக்களிடமிருந்து வைப்புக்களைப் பெற்றுக்கொள்வது சட்டவிரோதமான செயல் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

விவசாயத் திட்டங்களில் முதலீடு செய்தால் மாதாந்தம் பெரும் தொகை லாபமாக வழங்கப்படும் எனக் கூறிக் கவர்ந்திழுக்கும் நபர்களிடம் மக்கள் ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வங்கி அல்லாத நிதி நிறுவன மேற்பார்வைப் பிரிவினால் இது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவ்வாறான போலி நிறுவனங்களில் ஏற்கனவே பணத்தை முதலீடு செய்தவர்கள், எவ்வித தாமதமுமின்றி உடனடியாகத் தமது பணத்தை மீளக் கோருவதே பாதுகாப்பானது என ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106