ரணிலின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை – சுட்டிக்காட்டும் டக்ளஸ் தேவானந்தா!

Friday, July 17th, 2026


…..
ரணிலின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை எனச் சுட்டிக்காட்டிய முன்னாள் கடற்தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா,
நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் , மேலதிகமாக எம்மால் காணிகளை விடுவிக்க முடியாமல் போய் விட்டது என என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றையதினம் (16)  நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை நாம் அரசாங்கத்துடன் பேசி   விடுவித்திருந்தோம்.

கடந்த ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்திலும் கணிசமான காணிகளை விடுவித்திருந்தோம்.

மேலும் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்த வேளை தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் , அவற்றை விடுவிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால் ரணிலின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை என்றும் தெரிவித்தார்.

0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106