அதிகரிக்கும் டிஜிட்டல் கடன் மோசடி – சிக்க வேண்டாம் என விடுக்கப்பட்டது எச்சரிக்கை!
Sunday, July 12th, 2026
…..
ஆவணங்கள் அல்லது பிணையாளர்கள் தேவையில்லை” எனக் கூறி, சமூக வலைதளங்களில் 5,000 முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அவசர கடன் தருவதாகப் பகிரப்படும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கடன் பெறுவதற்காக அவர்கள் அனுப்பும் இணைப்புகளை (Links) கிளிக் செய்யும் போது, ‘RAT’ எனப்படும் மென்பொருள் உங்கள் கையடக்கத் தொலைபேசிக்குள் நுழைகிறது.
இதன்மூலம் உங்கள் கையடக்கத் தொலைபேசியிலுள்ள புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் தொடர்புகளை மோசடிகாரர்கள் முழுமையாகத் திருடுகின்றனர்.
குறிப்பாக .apk கோப்புகளைப் பதிவிறக்குவது உங்கள் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
சிறிய தொகையைக் கடனாக வழங்கி, பின்னர் அதிக வட்டி கேட்டு மிரட்டுவதுடன், உங்கள் நண்பர்கள் முன்னிலையில் உங்களை அவமானப்படுத்தும் செயல்களிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர்.
எனவே, அறிமுகமில்லாத இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள் என பொதுக்களை CERT எச்சரித்துள்ளது.
மேலும், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாகச் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக 101 என்ற இலக்கத்துக்கு அழைத்துத் தெரியப்படுத்துமாறும் இலகுவாகக் கடன் பெறச் சென்று உங்கள் பணத்தையும் கௌரவத்தையும் இழக்காதீர்கள் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106