நாட்டில் வருடாந்தம் 1.3 மில்லியன் பேர் திடீர் விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதி – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!
Wednesday, July 8th, 2026
….
இலங்கையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கான முதன்மைக் காரணியாக திடீர் விபத்துகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சுமார் 1.3 மில்லியன் (13 இலட்சம்) பேர் விபத்துகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதுடன், மேலும் 3 மில்லியன் பேர் இதற்காக சிகிச்சையை நாடுகின்றனர்.
ஒவ்வொரு நிமிடமும் 6 முதல் 8 பேர் விபத்துகள் காரணமாக சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
நாட்டின் மொத்த மரணங்களில் 8 வீதமானவை விபத்துகளாலேயே ஏற்படுகின்றன.
குறிப்பாக, நாட்டின் உற்பத்தித் திறன் கொண்ட வயதினரான 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களே விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
11வது தேசிய விபத்துத் தடுப்பு வாரம், நேற்று (ஜூலை 06) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அனுஷ்டிக்கப்படுகிறது.
தவிர்க்கக்கூடிய விபத்துகள் மற்றும் மரணங்களைக் குறைக்கும் நோக்கில், சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவு மற்றும் காயத் தடுப்புக்கான தேசியக் குழு (NCPI) இணைந்து இந்த விழிப்புணர்வு வாரத்தை முன்னெடுத்துள்ளன.
இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளது:
ஜூலை 06: வீதி விபத்துத் தடுப்பு
ஜூலை 07: பணியிட விபத்துத் தடுப்பு
ஜூலை 08: வீடுகள் மற்றும் முதியோர் இல்லங்களில் விபத்துத் தடுப்பு
ஜூலை 09: நீரில் மூழ்குவதைத் தடுத்தல்
ஜூலை 10: பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளில் விபத்துத் தடுப்பு
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதுகாப்பான சமூக சூழலைக் கட்டியெழுப்புவதே, இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Related posts:
|
|
|


