பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை மோதித்தள்ளிய இரு வாகனங்கள் – புளியங்குளத்தில் ஒருவர் பலி!
Tuesday, July 7th, 2026
……
பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை இரு புறமும் இருந்துவந்த சாகனங்கள் மோதித் தள்கியதில் புளியங்குளத்தில் ஒருவர் பலியானார்.
குறித்த சம்பவம் புளியங்குளம் எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னிரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில். –
வவுனியாவில் இருந்து அதிவேகமாக யாழ் நோக்கி வந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று குறித்த பாதசாரி கடவையூடாக வீதியைக் கடந்துசென்ற ஒருவரை மோதியுள்ளது.
இதன்போது ஹயஸ் வாகனத்தால் மோதித் தூக்கி எறியப்பட்ட நபரை யாழிலிருந்து வவுனியா நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த கார் மோதியதில் காரின் சக்கரங்கள் குறித்த நபரின் மீது ஏறி நெரித்துள்ளது.
இச்சம்பவத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடுமையான காயங்களுக்குள்ளாகி பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106