நீர்கொழும்பு சிறை கலவரம் – 2 நாட்களில் 26 பேர் மரணம் – 7 சிறை அதிகாரிகள் பலி!

Monday, July 6th, 2026


நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் சுமார் 100 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, கவலைக்கிடமான ஒரு சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க பரிந்துரைகளை வழங்கவும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெனாண்டோ தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வு பெற்ற மேலதிக சொலிசிட்டர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மிலிந்த குணதிலக, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106