சமூக ஊடக விதிமீறல் – ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடுகடத்தப்பட 3,500 பாகிஸ்தானியர்கள்!
….
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தங்கியிருந்த 3,500 பாகிஸ்தான் குடிமக்கள், அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் போக்கின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சமூக ஊடக விதிமுறைகளை மீறியதற்காக இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்களின் உடைமைகள் மற்றும் சொத்துகள், சட்ட நடைமுறைகளின்படி அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
சொத்துப் பரிமாற்றம் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்கள் தாங்கள் தங்கியிருக்கும் நாட்டின் சட்டங்களை, குறிப்பாக இணையப் பயன்பாடு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் பொதுத் தொடர்பு தொடர்பான விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106