இலங்கை வரும்ஐநா சித்திரவதை தடுப்புத் துணைக்குழு!
Saturday, June 13th, 2026ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழு தனது இரண்டாவது பயணமாக எதிர்வரும் 15 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
முன்னதாக, சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்பத்தேர்வு நெறிமுறையில் இலங்கை 2017 டிசம்பர் மாதம் இணைந்தது.
இதன் தொடர்ச்சியாக, 2019 ஏப்ரலில் துணைக்குழு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.
இந்த நிலையில், தற்போது வரும் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தூதுக்குழு, அமைச்சர்கள் மட்டத்தில் சந்திப்புகளை நடத்தவுள்ளது.
அத்துடன், தொடர்புடைய அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் குடிமைச் சமூக உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையுடனான ஈடுபாட்டுக் கொள்கை மற்றும் அரசியலமைப்புக்கு அமைவாக, அரசாங்கம் இந்தத் துணைக்குழுவுடன் வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் ஈடுபடும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106