எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு  உடனடி தீர்வு அவசியம்-  இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை – எரிபொருள் விநியோகஸ்தர் சங்கம் எச்சரிக்கை!

Sunday, April 5th, 2026


……
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின்கீழ் செயற்பட்டு வருகின்ற எரிபொருள் நிலைங்களின் உரிமையாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற நிர்வாக மற்றும் நிதிப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், பாரிய தொழிற்சங்கச் செயற்பாட்டுக்கு தாங்கள் செல்ல இருப்பதாக எரிபொருள் விநியோகஸ்தர்களது சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கம் எரிபொருள் கூட்டுத்தாபனத் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதற்கு முன்பதாக எரிபொருள் விற்பனைக்கெனத் தங்களுக்குக் கிடைத்துவந்த 3 வீதத் தொகையினை 2 வீதமாகக் குறைத்துள்ளமை காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களை முன்னெடுத்துச் செல்வதானது பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக சங்கம் தெரிவிக்கின்றது.

தங்களது கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைக்காவிட்டால், எதிர்வரும் 06ஆம் திகதி முதல் எரிபொருள் கூட்டுத்தாபன தலைமையகம், விடயத்துக்குப் பொறுபபான அமைச்சு அல்லது ஜனாதிபதி செயலகத்தை கேந்திரமாகக் கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக எரிபொருள் விநியோகஸ்தர்களது சங்கம் தெரிவித்துள்ளது.

தூரப் பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு இரவு வேளைகளில் எரிபொருள் கிடைப்பதால் பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும், இதனால் எதிர்வரும் 18ஆம் திகதிக்குப் பின்னர் இரவு 10 மணிக்குப் பின்னர் வரும் எரிபொருளை பாரமெடுப்பதில்லை எனவும் அவற்றை மறுநாள் 6.30 மணிக்குப் பின்னர் பாரமெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106