800 லீற்றர் டீசலுடன் ஏழாலை பகுதியில் இருவர் கைது!
Wednesday, March 4th, 2026
…
800 லிற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை (4) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழாலையைச் சேர்ந்த இருவரும் அதிகளவான டீசலை அதிக விலையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவர்களிடமிருந்து 800 லீட்டர் டீசல், டீசலை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கொள்கலன் என்பன பொலிஸால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.
Related posts:
பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை - கல்வி அமைச்சு !
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக தங்காலை பழைய சிறைச்சாலை - வெளியா...
லிங்கம் குளிர்பான நிலைய ஸ்தாபகர் அப்புலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அஞா...
|
|
|


