வங்கி அட்டை மூலமும் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை அறிமுகம்!
Friday, November 14th, 2025
…..
எந்தவொரு வங்கி அட்டை மூலமும் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டணத்தை செலுத்திய பிறகு மீதமுள்ள பணத்தை செலுத்தாதது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது என்றும், அதற்கு தீர்வாக வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் துறைசார் அமைச்சர் கூறியுள்ளார்.
வரவு செலவுத்திடம் இரண்டாவது வாசிப்பில் பங்கேற்றபோது அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர், LankaPay – GovPay மூலம் தற்போது பில்லியன் கணக்கான ரூபாய்கள் பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
000
Related posts:
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்த தடையுத்தரவு காலம் நீடிப்பு..
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164ஆக அதிகரிப்பு!
யாழில் வசமாக மாட்டிய சைக்கிள் திருடன் – பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
|
|
|


