பலமான ஒரு அணியுடன் மோத வேண்டும்: பாக். புதிய தலைவர்!
Tuesday, September 20th, 2016
எமது அணி வலிமை அடைய வேண்டும் என்றால் பலமான ஒரு அணியுடன் விளையாட வேண்டும் என பாகிஸ்தானின் ‘ருவென்ரி – 20’ அணியின் புதிய தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.
எமது அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் உள்ளது அதே போன்று ‘ருவென்ரி – 20’ மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் முதல் நிலையை அடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியதீவுகளுடனான மூன்று ‘ருவென்ரி – 20’ போட்டி தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மாறுபட்ட வீரகளை களமிறக்குவதற்கும், இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிகட்டுவதற்கும் இந்த தொடர் சிறப்பாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
இலங்கை கராத்தே சம்மேளன மாவட்ட மட்டப்போட்டியில் 32 தங்கம், 31 வெள்ளி, 26 வெண்கலம் வென்று மாகாதேவா சிற...
ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி!
T - 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் - சூப்பர் 8 சுற்றில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாபி...
|
|
|


