அச்சுவேலியில்பெண்தலைமைத்துவகுடும்பத்தின்கோழிகளுக்குவிஷம்வைத்துவிசமிகள்!
Monday, June 2nd, 2025
யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன.
கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.
வளலாய் மேற்கு, அச்சுவேலி (ஜே/284) பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை நடாத்தி வரும் குடும்பமானது இந்த சம்பவத்தால் நிர்க்கதியாகியுள்ளது. இது குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
000
Related posts:
புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு – போக்குவரத்து அமைச்சு அறிவ...
முதல் 10 ஓவர்கள் முடிவில் அரசாங்கத்தின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன - சம்பிக்க ரணவக்க!
|
|
|


