வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!
Monday, March 17th, 2025
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் பொதுச்சபை கூட்டமும் நேற்றையதினம் வைத்தியசாலையில் நடைபெற்றது.
இதில் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி கஜானா கெங்காதரன் தலைவராகவும், அ.இன்பராசா செயலாளராகவும், திரு.பேரின்பநாதன் பொருளாளராகவும், திரு.குலசிங்கம் உப தலைவராகவும், திருமதி. கலைமதி உப செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் வட்டுக்கோட்டையை பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் இருந்து ஒவ்வொரு நிர்வாக சபை உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டதுடன், கணக்காய்வாளர்களாக பு.கஜிந்தன் மற்றும் திருமதி. தாரணி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாகத் தெரிவின் பின்னர் வைத்தியசாலையின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. பின்னர் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுக்கு வந்தது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106