48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு – அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானம்!
Sunday, March 16th, 2025
48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பமாகவுள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேவையாளர் பற்றாக்குறை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
000
Related posts:
ஸ்டிக்கர்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து!
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற வடக்கு கிழக்கைச் சேர்ந்த 10 பேர் கைது!
தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு நோயின் தாக்கமும் அதிகரிப்பு - யாழ் மாவட்டத்தில் அதிகளவானோர் பாதிப்ப...
|
|
|


