சங்காவின் உதவியை கோரும் இலங்கை!
Monday, March 7th, 2016
T-20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்படுவதற்கு கிரிக்கெட் சபை முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது.வங்கதேசத்திடம் தோற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த இலங்கை, கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோற்றது.
இலங்கை அணியின் இந்த மோசமான நிலைமை எதிர்வரும் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் கவலையளிக்கும் விதமாக உள்ளது.இந்நிலையில் இலங்கை அணியை மறு மதிப்பீடு செய்யும் முயற்சியில் கிரிக்கெட் வாரியம் களமிறங்கியுள்ளது. இதற்காக முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது.
Related posts:
பரிதாபமாக தோற்றது மேற்கிந்திய தீவு: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இலங்கை!
இலங்கை சிங்கங்களின் பந்துவீச்சில் மண்டியிட்டது இந்தியா!
சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு - இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு!
|
|
|


