கராட்டி போட்டியில் தேசிய  ரீதியில் 3 ஆம் இடம் –  மாணவியை பாராட்டி கௌரவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 22nd, 2025

ல் தேசிய கராட்டி சுற்றிப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட மன்னார் மாவட்ட அடம்பன் மத்திய மகாவித்தியாலை மாணவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்தி கௌரவித்துள்ளார்.

கடந்த 04.12.2024 இல் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட கராட்டி போட்டியில் 13 வயதுக்கு உட்பட்ட சுற்றிப் போட்டியில் போட்டியிட்டு மாணவி சேரூஜா 3 ஆம் இடத்தினை பெற்றிருந்தார்.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த மாணவியை நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்ததுடன்  மாணவிக்கு நினைவு கேடயம் ஒன்றினையும் வழங்கி கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நீர்வேளாண்மை உற்பத்திகளை விஸ்தரிக்க நடவடிக்கை - வங்கிக் கடன் வசதிகளுக்கும் ஏற்பாடு என அமைச்சர் டக்ளஸ...
ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்ச...
இஸ்ரேலுடனான மோதல் - பாதிக்கப்படக்கூடிய 55 இலங்கைத் தொழிலாளர்கள் கொண்ட குழுவை லெபனானில் இருந்து வெளிய...