இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்வுள்ளார் ஜனாதிபதி!
Sunday, September 18th, 2016
இந்திய கோவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு முக்கிய பொருளாதாரத்துறை கூட்டங்களில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.
இதில் ஒரு கூட்டம் வங்காள விரிகுடாவின் பன்முக வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பினால் (BIMSTEC) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கூட்டம், பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டான (BRICS) பிரிக்ஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஒக்டோபர் 18ம் திகதியன்று இலங்கையில் இருந்து புறப்படுகிறார்.

Related posts:
சிறுவர் இல்லங்களை தரப்படுத்த நடவடிக்கை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
கடனை செலுத்துவதற்கான அனைத்து மாற்று வழிகளும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன - மத்திய வங்கியின் ஆளுனர் தெர...
கடன் மறுசீரமைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் குறித்து சீன ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடல...
|
|
|


