பல்வேறுபட்ட தரப்பினர் கோரிக்கைகளுடன் வருகை தந்திருந்த போதிலும் பிரதமர் ஹரிணியை சந்திக்க சந்தர்ப்பம் மறுப்பு – முல்லை மக்கள் குற்றச்சாட்டு!
Monday, February 17th, 2025
முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திப்பதற்கு பல்வேறுபட்ட தரப்பினர் வருகை தந்திருந்த போதிலும் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அமைச்சர் சந்திரசேகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகப் பிரதமரைச் சந்திப்பதற்காக வருகைதந்த கேப்பாபுலவு மக்களினால் அவரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்று நேற்றையதினம் நடத்தப்பட்டுள்ளது. இதில் கருத்துரைத்த காணி உரிமையாளர்களில் ஒருவர், பிரதமருடன் தாம் காணி விடுவிப்பு தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு வந்திருந்த போதிலும் ஒரு நிமிடம் கூட தமக்கு ஒதுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
000
Related posts:
நாட்டின் கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் – ஜனாதிபதி!
வார இறுதியில் பயண தடையை கடுமையாக அமுல்படுத்தப்படும் - மீறுபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை என பிரத...
சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் பொய்யானவை - தரமற்ற எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் வெளியிடப்படாது...
|
|
|


