கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இராணுவத்தினருக்கான விசேட பணிப்புரை!
Monday, February 17th, 2025
மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவத்தினரும் தமது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக கடவுச்சீட்டு பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிர்வாக நோக்கங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
எனினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் கடவுச்சீட்டுகளை உரிய படைப்பிரிவுகளிடம் திரும்பப் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொருத்து வீட்டை தடுக்கக் கோரி உயர்நீதிமன்றம் சென்றது கூட்டமைப்பு !
காணி, நிதி பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து மாவட்டங்களிலும் நியாயாதிக்க சபை - எடுக்கப்பட்டதாக நீதி அமை...
மேலும் பல பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்திக்கு விதிக்கப்பட்டது தடை - சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அம...
|
|
|


