செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை கௌரவித்த சாவகச்சேரி மக்கள்!
Friday, February 14th, 2025
……
சாவகச்சேரி, பெரியமாவடி, சித்தி விநாயகர் சனசமூக நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட , ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கான நன்றியறிதலும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அவர்களின், 2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் குறித்த சனசமூக நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
குறித்த நிதியிலிருந்து தளபாட உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், சனசமூக நிலையத்தினரால் செயலாளர் நாயகத்திற்கான கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. –
Related posts:
மகாராணியின் தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்தால் ஒரு கோடி இலங்கை ரூபாய் ஊதியம்!
நாடாளுமன்ற தேர்தல் 2020
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு!
|
|
|


