நாகர்கோவில் மேற்கு பகுதியில் தீயில் எரிந்த வீடு – விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குடும்பஸ்தர்!
Thursday, January 23rd, 2025
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்று நேற்று (22) அதிகாலை தீப்பிடித்துள்ளது.
அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட குடும்பஸ்தர் கடும் முயற்சியின் பின் தீயை அணைத்துள்ளார்.
விசமிகளால் தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குடும்பஸ்தர் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசார் தீ பிடித்த வீட்டை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
இரண்டாம்மொழி அறிவு வைத்தியர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும்!
நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பில் நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி!
வேட்பாளர் வைப்புத்தொகை 43 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை - ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் சாத்தியமில்ல...
|
|
|


