புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனை 50 வீதத்தால் பாரிய வீழ்ச்சி – அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கவலை!.
Friday, January 3rd, 2025
கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனையானது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்ணான்டோ தெரிவித்தார்.
முன்னைய ஆண்டுகளில் நத்தார் மற்றும் புத்தாண்டு நாட்களில் பட்டாசு உற்பத்தி அதிகளவில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் பட்டாசு விற்பனை சரிந்ததால், உற்பத்திச் செலவை ஈடுகட்ட, பட்டாசுக்களை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய, உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த தேர்தல் காலத்தில் இருந்து பட்டாசு உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தினேஷ் பெர்னாண்டோ வெளிப்படுத்தினார்
00
Related posts:
கனடாவின் நிதியுதவியுடன் புதுக்குடியிருப்பில் பால் பதனிடல் நிலையம்!
பலாலி விமானத் தளம் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்யப்படும் - பிரதமர்!
தபால்மூல வாக்கெடுப்புக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல்!
|
|
|


