தேங்காய் விலை அதிகரிப்பு – பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் பல – தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர்!
Tuesday, December 3rd, 2024
அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
சில இடங்களில் தேங்காய் ஒன்று 220 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.
தென்னை ஏற்றுமதி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சுமார் 100 கோடி தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மென்பானங்களின் சீனியின் அளவு பரிசோதிக்கப்படும்!
அரைவாசி கட்டணத்தையே அறவிட தீர்மானம் - அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் தெர...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் விஷேட நிகழ்வுகள்!
|
|
|
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இலங்கையின் அரச தலைவர்களால் ஆரம்பித்துவைப்பு!
ஒப்பந்தக்காரர்களின் நிலுவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன் முன்னர் வழங்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல ...
பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் -. வைத்திய நிபுணர்கள் எச...


