நல்லூர் வீதியில் புகுந்த பாரிய முதலை!
Saturday, November 23rd, 2024
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
http://www.epdpnews.com/wp-content/uploads/2024/11/VID-20241123-WA0063-1.mp4

000
Related posts:
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு பிரதமர் மஹி...
வவுனியா உள்ளிட்ட மேலும் 3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை முன்னெடுப்பு - அமைச்சர் த...
பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக் கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய...
|
|
|
எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளை கண்டித்து அனைத்து பிரதேச சபையின...
வெளிநாடுகளில் இருந்து சட்டரீதியாக பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு வாகனம் வாங்க வரிச்சலுகை - வெளிநாட்...
நாளைமுதல் ஒரு வாரத்திற்கு வடக்கில் டெங்கு ஒழிப்பு வாரம் – சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்ப...


