10 ஆவது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு – நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அறிவிப்பு!
Saturday, November 16th, 2024
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
இதன்போது, நாடாளுமன்ற முறை, பேரவையின் பணிகள், குழுக்களின் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்றார்.
அதன்படி , 10 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதிவு எதிர்வரும் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
அந்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் குழுக்கள் தயார்படுத்தப்படும் என்றும் குலரத்ன கூறினார். மேலும் இந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை 18 முதல் 22 வரை இரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், கூறினார்
000
Related posts:
சுகாதார அமைச்சருக்கு கல்வியின் தரம் பற்றிய பொறுப்பில்லை - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
அதிகாரிகள் குளறுபடிகளால் ஆசிரிய நியமனம் இழுபறிப்படுகிறது - விரைவில் வழங்குமாறு பட்டதாரிகள் கோரிக்கை!
உலகின் தலைசிறந்த 20 விஞ்ஞானிகளில் இரண்டு இலங்கைர்கள் -“Research.com” நடத்திய ஆய்வில் தகவல்!
|
|
|
பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டன - முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எ...
நல்லூர் ஆலய வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண...
நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டங்களை மதித்து பக்கச்சார்பற்ற வகையில் செயற்பட வேண்டும்...


