ஜனாதிபதி நாளை அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்!
Saturday, September 17th, 2016
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார்.
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ஆம் பொதுச் சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி நாளை அமெரிக்காவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார்.
பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு 194 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.சாதாரண விமானம் ஒன்றில் எளிமையான முறையில் குறைந்த பிரநிதிகள் எண்ணிக்கையுடன் ஜனாதிபதி இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:
மீண்டும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்படலாம் - சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை மிகவும் சிறந்ததாக மாற்ற முடியும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய த...
பரேட் சட்ட விவகாரம் - இலங்கை வங்கிகள் சங்கம் எச்சரிக்கை!
|
|
|


