காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை – வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என  அறிவிப்பு!

Sunday, November 3rd, 2024

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாகை –  இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமானது.

முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது.

அதன் பின்னர் சனிக்கிழமை உட்பட 4 நாட்களாக கப்பல் சேவை நீடிக்கப்பட்டதுடன் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்தது.

இதனைத்தொடர்ந்து எதிர்வரும் வாரத்தில் 5 நாட்கள் கப்பலை இயக்க கப்பல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதிமுதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படும் என ‘சிவகங்கை’ கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

000

Related posts:

இந்த ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது - அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்று நோயியின் தாக்கம் அதிகரிப்பு - கடந்த வருடம் 71 பேர் உயிரிழந்துள்ளதாக வை...
பாடசாலை நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை -  புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக...

அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை பரீட்சையை ஒத்திவையுங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உயர்தர மாணவர்கள்...
ஜூனில் 27 ஆயிரத்து 937 பேர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக...
நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் சரியான வகையில் மக்களுக்குக் கிடைப்பதற்கு அரச அதிகா...