வாக்களிப்பு என்பது ஓர் அதி சிறந்த சந்தர்பம் – சரியாக பயன்படுத்துங்கள் – ஈ.பி.டி.பியின் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா! 

Saturday, October 19th, 2024

வாக்களிப்பு என்பது ஒரு அதி சிறந்த சந்தர்பமாகும். அந்தவகையில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர விரும்பும் தமிழ் மக்கள் தமது எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்ளும் வகையில் கிடைத்துள்ள இந்த நாடாளுமன்ற தேர்தல் என்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வது அவசியமாகும் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிடைக்கவுள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தாது தவறவிடும் பட்சத்தில் அதனை மீளவும் நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

ஊர்காவற்றுறை, கொத்திக்குளம் பகுதியில் (18/10/24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் குடிநீர், மற்றும் காணிப் பிரச்சினைகள், படித்த இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புகள் தொடர்பில் கேட்டறிந்தார். இதன்பின்னர் கருத்த தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

கடந்த காலங்களை போன்று ஏமாற்றுத் தரப்பினரது சுயநலங்களுக்கு எடுபடாது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதே எமது விருப்பாகும்.   

இதேநேரம் எம்மிடம் சிறந்த கொள்கையும் அனுபவம் மிக்க வழிநடத்தலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான பொறிமுறையும் இருக்கின்றது. இது இன்று அனைவராலும் ஏற்றும்கொள்ளப்பட்டுள்ளது.

அதனால் எம்மை நம்பி எமது கடந்தகால மக்கள் நலத்திட்டங்களை மனதில் நிறுத்தி உங்கள் வாக்குகளை எமது வீணைச் சின்னத்துக்கு அளியுங்கள் என நாம் உங்களிடம் கோருகின்றோம்.

அத்துடன் உங்கள் வாக்குகளால் எமது கட்சி அரசியல் ரீதியில் வலுப்பெறும்போது மக்கள் நலத்திட்டங்களை மேலும் துரிதகதியில் முன்னெடுத்துச் செல்லவும் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்ளவும் கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம்.

சக தமிழ் அரசியல் தலைமைகள் தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் இரகசிய உறவை வைத்துக்கொண்டு தமது சுயலாபங்களைப் பெற்ற பின்னர் அரசு ஏமாற்றிவிட்டது என்று மக்களை ஏமாற்றுவார்கள்.

நாம் அவ்வாறு ஒருபோதும் சொல்வதும் இல்லை சொல்ல விரும்புவதும் இல்லை. நாம் சொல்வதைத்தான் செய்வோம். என்மீது நம்பிக்கை வையுங்கள் என்று அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஊர்காவற்றுறை, சென். ஜேம்ஸ் சனசமூக நிலையத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார்.

குறித்த கலந்துரையாடலின்போது அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாக மிகவும் அத்தியாவசியத் தேவையான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் தேவையான நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வு பெற்றுக் கொடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:

நிறுவனமும் சூழலும் வலுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் - குருநகர் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைச்...
கடற்றொழில்சார் மக்களின் வாழ்வியலை பாதுகாத்து வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு - பிரச்சினை...
அனைவருக்கும் நன்மை தரக்கூடிய தீர்வு பெற்றுத்தரப்படும் – ஒந்தாச்சிமடத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு...

கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களூடாக மக்கள் நலன்களை முன்னெடுத்து  சாதித்துக் காட்டுங்கள் - கிளிநொச்சியில...
கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர் சங்கங்கள் கோரிக்...
புதிய வருடத்தில் புதிய பரிணாமத்திற்கு செல்லவேண்டிய சவால் அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது - ஜனாதிபதி ...