நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கட்சி செயலாளர்கள் நாளை சந்திப்பு!
Monday, October 14th, 2024
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (15) நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் நாளை காலை 9.30 மணிக்கு கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணையகத்தில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் அரசியல் கட்சி செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
இதன்போது, தேர்தல் காலத்தில் ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகையும் நாளை தீர்மானிக்கப்பட உள்ளது.
அதையடுத்து இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இது தவிர நாடாளுமன்றத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
00
Related posts:
அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் ஆரம்பம் - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திப்பு - இரு தரப்பு ஒப்பந்...
ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை - இடைக்கால பாதீட்டு சட்டமூலம் மற்றும் எதிர்கால அரசியல்...
|
|
|


