ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் பிரதேச வட்டாரக்குழு, கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரைாடல்!   

Thursday, October 3rd, 2024

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின், யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டாரக்குழு உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று (03.10.2024) முற்பகல் யாழ் கட்சியின் தலைமையகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, தேர்தல் பிரச்சார முன்னெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முகங்கொடுக்கும் பொறிமுறைகள் மற்றும் வெற்றிகரமான பிரசார நடவடிக்கைகள் குறித்தும் செயலாளர் நாயகத்தினால் தெளிவூட்டப்’பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
வடக்கு கிழக்கில் சுதேச மருத்துவத்துறையை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அரசாங்கமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என ப...