நாடாளுமன்ற தேர்தல் – நாளை வேட்புமனுத் தாக்கல் – ஒக்டோபர் 11 ஆம் திகதி இறுதி நாள்!

Thursday, October 3rd, 2024

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (04) ஆரம்பமாகவுள்ளது.

வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி நாளைமுதல் ஒக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

11 ஆம் நண்பகல் 12.00 மணிக்குப் பிறகு, வேட்புமனுத் தாக்கல் மற்றும் அனைத்து குழுக்களுக்கும் ஆட்சேபனை தெரிவிக்க ஒரு மணி நேரம் அனுமதிக்கப்படும். தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும், புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

000

Related posts:


நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி ஆரம்பம் - யாழ். போதனா வைத்தியசாலைப் ப...
அடுத்த சில மாதங்களில் கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாற்றம்பெறும் – சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்ப...
உயர்தரப் பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படு...