தேர்தல் தொடர்பில் இதுவரை 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன – தேர்தல்கள் ஆணைக்குழு!
Tuesday, September 17th, 2024
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,379 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 3,032 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
அதேநேரம், கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளில் 3,828 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
மத்திய வங்கிக்கு புதிய நாணய நிதி சபை!
அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி சவேந்திர சில்வா சாதனை!
விளையாடு துறையில் மாணவர்களின் பங்களிப்பு வீழ்ச்சிகண்டு வருகின்றது - வேலணை மத்தியின் அதிபர் கஸ்ரன் ரோ...
|
|
|


