சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கை வருகை!
Monday, September 16th, 2024
சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 43 பேரும், பொதுநலவாய நாடுகளை சேர்ந்த 22 பேரும் கூடுதலாக, தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து 6 பேரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அண்டை நாடுகளைச் சேர்ந்த 7 பேர் இந்த செயற்பாட்டில் மேலும் இணைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 34 ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் மற்றும் 3 கூடுதல் ANFREL பிரதிநிதிகள் எதிர்வரும் நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 22 தேர்தல் தொகுதிகளிலும் விரிவான கண்காணிப்பை உறுதி செய்வதற்காக பார்வையாளர் குழுக்கள் தங்களது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
000
Related posts:
தோழர் மகேஸ்வரனின் தாயார் செங்கமலம் தம்பிப்பிள்ளை காலமானார்!
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 71 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது பொலிஸ...
|
|
|


